நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் நேற்று முன்தினம் (செப்.24) மாடு மேய்த்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி சந்திரனை, புலி தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி தொழிலாளர்கள், பொதுமக்கள் தேவர்சோலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து இரண்டு இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.
தேவன் எஸ்டேட் பகுதியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில் 100 வனத்துறையினர் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்பது இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. டிரோன் கேமிரா மூலமும், மரங்களின் மீது பரண் அமைத்தும் புலியின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.