நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட தொரப்பள்ளி முதுமலை எல்லையில் உள்ளது. சமீப காலமாக மூன்று யானைகள் முதுமலை எல்லையைத் தாண்டி நகர் பகுதிக்குள் வந்து வாகனங்களை தாக்குவதும், வீடுகள், கடைகளை உடைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
யானை வராமல் இருக்க வனத்துறை தீவிர கண்காணிப்பு! - தீவிர கண்காணிப்பு
நீலகிரி: முதுமலையில் இருந்து நகருக்குள் யானை வராமல் இருக்க, எல்லைப் பகுதியில் கும்கி யானை மூலம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊருக்குள் வந்த யானை பால் கொள்முதல் செய்யும் வாகனத்தை தாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் முதுமலை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, வனத்துறை சார்பாக யானை ஊருக்குள் வராமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்படி வனத்துறை சார்பாக குழு அமைக்கப்பட்டது. யானைகள் அகலி கால்வாய் மூலம் தாண்டி வரும் ஐந்து இடங்களில் இரவு பகலாக தீ மூட்டியும், இரண்டு கும்கி யானைகள் மூலம் ஊருக்குள் வரும் யானைகளை தடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.