நீலகிரி: குன்னூரில் 2021 - 22ஆம் நிதி ஆண்டிற்கான பயிர்க்கடன் வழங்கும் விழா குன்னூர் எடப்பள்ளி இளித்தொரை கிராமத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.
இதில் 341 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பிலான வேளாண் பயிர்க் கடன்களை வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் அலுவலர்கள் பங்கேற்றனர்.
விரைவில் நடவடிக்கை