தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்குடியின சிறுவர்களை அழைத்து செருப்பை கழற்றவைத்த அமைச்சர் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி: முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் பழங்குடியின சிறுவனை அழைத்து தன் செருப்பைக் கழற்றவைத்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Forest Minister Dindigul Srinivasan controversy, Dindigul Srinivasan controversy over asking to remove his sandals by tribal boy, asking to remove his sandals by tribal boy, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செருப்பை கழற்ற வைத்த அமைச்சர்
பழங்குடியினச் சிறுவனை தன் செருப்பை கழற்ற வைத்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

By

Published : Feb 6, 2020, 1:02 PM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள 26 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.

அப்போது, அங்குள்ள விநாயகர் கோயிலில் யானைகள் பூஜை நடத்தப்பட்டது. பூஜையைக் காண கோயிலுக்குள் செல்வதற்காக காலணியைக் கழற்ற வேண்டுமென்பதால், அங்கு நின்றுகொண்டிருந்த இரு பழங்குடியின சிறுவர்களை, ‘வாடா தம்பி’ என்று ஒருமையில் அழைத்துள்ளார். பின்னர் தான் அணிந்திருந்த காலணியைக் கழற்றுமாறு அச்சிறுவர்களைப் பணித்து, தனது காலணியைக் கழற்றவும் வைத்தார்.

'இனி உன்னை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்' - மனைவியின் கூந்தலை வெட்டிய கணவர்

அனைவரின் முன்னிலையில் அமைச்சர், சிறுவனைக் காலணி கழற்ற வைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியினச் சிறுவனை அழைத்து தன் செருப்பை கழற்ற வைத்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

ABOUT THE AUTHOR

...view details