தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனச்சரகர் கைதை கண்டித்து வன அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் - வால்பாறையில் வனச்சரகர் கைது

வால்பாறையில் வனச்சரகர் கைது செய்யபட்டதை கண்டித்து உதகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வன அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 25, 2021, 7:58 PM IST

நீலகிரி:வால்பாறை சிற்குன்றா வனப்பகுதியிலுள்ள வனத்துறை எஸ்டேட் அரசு விருந்தினர் மாளிகையில் செப்.23ஆம் தேதியன்று இரவு உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜாவின் மகன் நாராயணன், அவரது நண்பர்கள் சிலர் தங்கியுள்ளனர். பின்னர், அவர்கள் அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கிருந்த வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், இளைஞர்கள் வனத்திற்குள் வந்ததை கண்டித்து, திரும்பி செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், இளைஞர்களுக்கும், ஜெயசந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், வனச்சரகர் ஜெயசந்திரன் மீது பொள்ளாச்சி நீதிமன்ற எழுத்தாளர் மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வனச்சரகர் ஜெயச்சந்திரன் மீது ஜாமினில் வெளி வர முடியாத மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதுமுள்ள வனத்துறையினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வன அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து, நீலகிரி மாவட்ட வனத் துறையினர் சார்பாக உதகையில் இன்று (செப்.25) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வனத்துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

வன அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மேலும், வனத்துறை கட்டுபாட்டிலுள்ள தங்கும் விடுதிகளை உச்ச நீதிமன்ற உத்தரவு படி இனி வரும் நாள்களில் வனத் துறையினரை தவிர வேறு யாரும் தங்க அனுமதிக்க கூடாது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்கள். அந்த தீர்மானத்தை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details