இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. இதனால்,வனப்பகுதியில் வாழ்ந்துவரும் காட்டு விலங்குகளுக்கு உணவு தண்ணீரின்றி தவித்துவருவதால் அவைகள் குடியிருப்புப் பகுதிகளையும் விவசாய நிலங்களையும் தேடிவருகின்றன.
இந்நிலையில் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள், குன்னூர் அருகேயுள்ள கொலக்கொம்பை டெரேமியா பகுதியில் நுழைந்தன. அந்தப் பகுதியில் ராமசந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் அவரது நிலத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.