தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்றும் ஒன்றிணையும் வனப் பகுதியாக அமைந்துள்ளன. தற்போது பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நல்ல மழை பெய்து பசுமையாகக் காட்சித் தருகின்றது.
இந்நிலையில், இந்த வனப்பகுதிக்கு நேற்று (ஆக. 1) மாலை வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனச்சாலையில் நடந்துசென்ற 10 வயது மதிக்கத்தக்க புலியை எட்டுக்கும் மேற்பட்ட செந்நாய்கள் சூழ்ந்துகொண்டு புலியிடம் போக்குக் காட்டி விளையாடின.