நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம், வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த பகுதிகளுக்கு மிக அருகாமையில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.
இந்த விடுதிகளுக்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.தீபாவளி பண்டிகையின் போதும்சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும் எனும் நிலையில்இங்கு வருபவர்கள் பட்டாசு வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.