கூடலூர் பகுதியில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்! - கும்கி யானைகளை
<p><strong>நீலகிரி:</strong> கூடலூர் அடுத்த பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த காட்டு யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் பரண் அமைத்துக் கண்காணித்து, கும்கி யானைகளின் உதவிகளோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். </p><p>இதனிடையே அவ்வப்போது யானைகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், அலுவலகப் பணியாளர்கள் போன்றவர்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், ரோந்து பணியிலிருந்த வனத்துறை ஊழியர் ஒருவரைக் காட்டுயானைகளை விரட்டி உள்ளது. அதனை சுதாரித்துக் கொண்ட வனத்துறை ஊழியர் தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள், ஊருக்குள் புகும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் மற்றும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.</p>
ஊருக்குள் உலா வரும் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை
Published : Oct 16, 2023, 10:39 PM IST