நீலகிரி: குன்னூர் மற்றும் கோத்தகிரியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் தேயிலைத்தோட்டங்கள் உள்ள பகுதிகளில் உலா வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள ஹை பீல்டு பகுதியில் இருக்கும் தேயிலைத்தோட்டத்தில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, சாக்லேட் தொழிற்சாலைக்குள் வந்து அங்கிருந்த சாக்லேட்டுகளை உண்டு விட்டுச் சென்றது.
ஆலைக்கு வந்து சாக்லேட் சாப்பிட்ட கரடி - பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை! இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே, கரடியைப் பிடிக்கக் கூண்டு வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தனியார் சாக்லேட் தொழிற்சாலை முன்பு வனத்துறையினர் கூண்டு வைத்து, கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:வீடியோ: காஷ்மீரின் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் இமாலயப் பழுப்பு கரடிகள்