நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்த அடர்வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியின் நடுவே நாற்பத்தி எட்டு கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதை உள்ளது. இந்த பாதையில் கேரளா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில், மஞ்சூர் - கோயம்புத்தூர் சாலையில் இரு தினங்களாக காட்டுயானகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களையும் காட்டுயானைகள் வழிமறித்து நிற்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர், காட்டுயானைகள் சாலைகளில் வலம் வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சாலையில் வலம் வரும் காட்டுயானைகள்: எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தல்!
நீலகிரி: குட்டிகளுடன் காட்டுயானைகள் சாலையில் உலாவருவதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் தங்களின் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
elephants