தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சர்வதேச புலிகள் தினத்தை' மறந்துபோன வனத்துறை! - புலிகள் தினம்

நீலகிரி: சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தாத வனத்துறைக்கு, வன ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சரணாலயம்

By

Published : Jul 30, 2019, 2:38 AM IST

உலகில் சர்வதேச புலிகள் தினம் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தேசிய விலங்காக உள்ள புலி 2000-ம் ஆண்டு அதன் எண்ணிக்கை 1700 ஆக இருந்தது. இவற்றை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி பல வன பகுதிகளை புலிகள் சரணாலயமாக அறிவித்தது.

நீலகிரி சரணாலயத்தில் சுற்றித்திரியும் புலிகள்

அதற்கான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுத்ததால், தற்போது புலிகளின் எண்ணிக்கை உலகில் 3890 ஆக உயர்ந்துள்ளது.

இதில் இந்தியாவில் 2226 புலிகள், ரஷ்யாவில் 433, இந்தோனேசியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, பங்ளாதேசில் 106, பூட்டானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, லாஓவில் 2 புலிகள் உள்ளதாக 2016ஆம் ஆண்டு கணக்கெடுபின்படி தெரியவந்துள்ளது.

புலிகள் தினம் கொண்டாடாத வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்திலுள்ள 56 சதவீத வனபகுதிகளில் 150 மேற்பட்ட புலிகள் உள்ளன. இந்நிலையில் நீலகிரியில் ஆண்டுதோறும் புலிகள் தினத்தையொட்டி, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு புலிகளினால் ஏற்படும் நன்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

சர்வதேச புலிகள் தினம்

ஆனால் தற்போது நீலகிரி வனப்பகுதியில் 150க்கு மேல் புலிகள் இருந்தும் புலிகள் தினத்தை வனத்துறையினர் எந்தவொரு
நிகழ்ச்சியும் நடத்தாமல் இருப்பதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details