தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை எச்சரித்த வருவாய்துறையினர்! - nilagiri news

நீலகிரி: வெளிநாட்டில் இருந்து வந்த இருவர் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதால், அவர்களது வீட்டுக்கே சென்று வருவாய்த்துறை அலுவலர்கள் எச்சரித்தனர்.

நீலகிரி மாவட்டச் செய்திகள்  கூடலூர் செய்திகள்  வெளிநாட்டில் இருந்த வந்த இருவர்  nilagiri news  foreign return people warned by revenue department
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை எச்சரித்த வருவாய்துறையினர்

By

Published : Mar 26, 2020, 4:57 PM IST

பல்வேறு நாடுகளில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்குத் திரும்பிய 64 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கூடலூர் அருகேயுள்ள மேல் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் துபாயில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடலூர் திரும்பியுள்ளனர்.

இருவரும் கூடலூர் திரும்பியபோது வெளியில் நடமாடக் கூடாது என்றும் வீடுகளில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும் எனவும் அலுவலர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால், அறிவுரையை ஏற்காது பொதுவெளியில் அலட்சியமாக நடமாடி உள்ளனர். இது குறித்து வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினரோடு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் சென்றனர்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை எச்சரித்த வருவாய்துறையினர்

இருவரையும் எச்சரித்த அலுவலர்கள், இருவர் மீது கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், இனிவரும் நாட்களில் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:சுற்றித்திருந்த வங்கதேச இளைஞர்: மடக்கிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்த காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details