நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 80 விழுக்காடு இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில், இன்று மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தோடர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பொன்தோஸ் போட்டியின்றி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு தேர்தல் அலுவலர் மாவட்ட ஊராட்சி தலைவராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பழங்குடியினருக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாய்ப்பு அளித்ததற்கு பொன்தோஸ் நன்றி தெரிவித்துள்ளார்.