தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கிராம மக்கள் தவிப்பு - மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் தவிப்பு

நீலகிரி: நேற்று இரவு முதல் காலை வரை கொட்டித்தீர்த்த கனமழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் வெளியே வர முடியாமல் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.

மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் தவிப்பு

By

Published : Oct 8, 2019, 4:58 PM IST

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு முதல் அதிகாலை வரை கொட்டித் தீர்த்த கன மழையால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தொடர்ந்து தற்போது வரை அதிக அளவு தண்ணீர் வருவதால் தெங்குமரஹாடா, அல்லிமாயார் உள்பட 14 கிராம மக்கள் ஆற்றைக் கடந்து கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளனர்.

மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் தவிப்பு

மாயார் ஆற்றுவழியாக செல்லும் நீர் பவானி அணைக்கு செல்வதால் பவானி அணை வேகமாக முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு மறுப்பு - காவல் கண்காணிப்பாளரை மாற்ற அமித்ஷாவுக்கு கடிதம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details