நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் மழைக்காலம், பனிக்காலம், கோடைக்காலம் என காலநிலைக்கு ஏற்ப பூக்கக் கூடிய பல வகையான மரங்கள் உள்ளன. இதில் தற்போது குளிர் காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கி உள்ளதால், கோடை காலத்தில் பூக்கக்கூடிய மரங்கள் பூக்கத் தொடங்கி உள்ளன.
குறிப்பாக இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட 'பிளேம் ஆப் தி பாரஸ்ட்' என்று அழைக்கக் கூடிய இலைபொரசு மரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கி உள்ளன. இந்த மரங்களின் பூக்கள் பூக்கும் போது இலைகள் முழுவதும் உதிர்ந்து மரம் முழுவதும் சிவப்பு நிற பூக்களாக பூக்கும் தன்மை கொண்டவை.
அவ்வாறு பூக்கள் பூத்துள்ள காலங்களில் தொலைவில் இருந்து அந்த மரங்களைப் பார்க்கும் போது வனப்பகுதியினுள் தீ எரிவது போல காட்சியளிப்பதால், இதனை 'பிளேம் ஆப் தி பாரஸ்ட்' எனப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
வனப்பகுதியினுள் தீ எரிவது போல காட்சியளிக்கும் ’பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் அதிக அளவில் இந்த மரங்கள் காணப்படும் நிலையில், தற்போது அந்த மரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கி வருகின்றன. பார்க்க சிவப்பு கம்பளம் போர்த்தியது போல அழகாக இந்த மரங்கள் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
பூத்து குலுங்கும் இலைபொரசு மலர்கள் இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 8,35,525 பேர் தேர்வு எழுதுகின்றனர்