நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் சிகிச்சைப் பெற்று வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு ஏற்கனவே யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது முதன் முறையாக புதிய நீராவி கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.