தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை - auto ambulance in nilgiri

தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

first-time-auto-ambulance-in-nilgiri
தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

By

Published : Jul 2, 2021, 8:23 AM IST

நீலகிரி:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராதிகா என்பவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிவருகிறார். இவர், அண்மையில், தன்னார்வலர்களுடன் இணைந்து குன்னூர் லாலி மருத்துவமனைக்கு இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி கொள்கலன்களை இலவசமாக வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, தற்போது, 6 ஆட்டோ ஆம்புலன்ஸை குன்னூர், கோத்தகிரி பகுதிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்தில் செயல்படவுள்ளது. இந்த ஆட்டோ ஆம்புலன்ஸில், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ராதிகா, "இந்த 6 ஆட்டோ ஆம்புலன்ஸும் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து தயாரித்து கொண்டுவரப்பட்டது.

ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள 6 ஆட்டோ ஆம்புலன்ஸ் தற்போது குன்னூர், கேத்தி, கோத்தகிரி உள்ளிட்டப் பகுதிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ ஆம்புலன்ஸ்

சிறிய அளவில் ஆட்டோ ஆம்புலன்ஸ், குறுகலான இடங்களில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லப்பயன்படுத்தப்படவுள்ளது.

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில், ஆட்டோ ஆம்புலனஸ் நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:கரோனா நோயாளிகளுக்காக ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய நபர்

ABOUT THE AUTHOR

...view details