நீலகிரி மாவட்டம் குன்னூர் மௌண்ட் பிளசன்ட் பகுதியில் பிரமாண்ட அளவில் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. இந்நிலையில் மூன்று அடுக்கு மாடி உயரத்திலிருந்து இரு கட்டடங்களுக்கு நடுவே சூரியன் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்ட குறைந்த இடைவெளியில் சுமார் 60 அடி பள்ளத்தில் கர்ப்பமான பசு ஒன்று விழுந்து சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.
உடனே கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அலுவலர் மோகன் தலைமையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 60 அடி உயரத்திலிந்து, கயிறு கட்டி தரைத்தளத்தில் உள்ள வீட்டு ஜன்னல் வழியாக மாட்டை வீட்டிற்குள் கொண்டு சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி இந்த பசுவை உயிரோடு மீட்டு முதலுதவி அளித்தனர்.