நீலகிரி மாவட்டம், குன்னுார், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் கொலக்கம்பை அருகேயுள்ள தூதூர்மட்டம் கிராமத்தில் சுமார் 200 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது, கிராமத்திலுள்ள மக்களுக்கும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (25), தங்கவேலு (45) ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இருவரும் வெளியே சுற்றிவந்தனர். இதுதொடர்பாக வருவாய்துறை மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருவர் மீதும் கொலக்கம்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.