நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் ஜீப்பில் பயணம் செல்வதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் உத்தரவின்படி, வனச்சரகர் மாரியப்பன், வனவர் சித்தராஜ், வன ஊழியர்கள் உள்ளிட்டோர் வனப்பகுதியில் சோதனை செய்தனர்.
நீலகிரியில் அனுமதியின்றி சுற்றுலா சென்ற பயணிகள் - அபராதம் விதித்த வனத்துறையினர்! - Nilgiri Tourists
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் அனுமதியின்றி சுற்றுலா சென்ற பயணிகளுக்கு 85 ஆயிரம் ரூபாய் அபராதத்தை வனத்துறையினர் விதித்தனர்.
அனுமதியின்றி சுற்றுலா சென்ற பயணிகள்
அப்போது அங்கு அனுமதியின்றி நின்று கொண்டிருந்த இரண்டு ஜீப்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை ஓட்டி வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 85 ஆயிரம் ரூபாய் அபராதத்தை விதித்தனர். பின்னர், வனப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மசினகுடி வனத்துறை துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொடைக்கானல் பூங்காவில் குரங்கு தொல்லை - அவதிக்குள்ளாகும் சுற்றுலாப் பயணிகள்
Last Updated : Mar 16, 2020, 11:58 PM IST