நீலகிரி:நாட்டின் பழமை வாய்ந்த ராணுவ மையமாகத் திகழும் நீலகிரி மாவட்டம், குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவ மையத்தை, மாநில நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று (ஜூலை 2) பார்வையிட்டார்.
இந்நிகழ்வு, முப்படை பாதுகாப்பு அலுவலர் பயிற்சி கல்லூரித்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மோகன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் ராணுவ மைய உயர் அலுவலர்களும் இதில் பங்கேற்றனர். இதில் போர் நினைவு தூணிற்குச்சென்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த்தியாகம் செய்த முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.