கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதையடுத்து தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் வட்டாட்சியர் ரவிக்குமார் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.