நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதியில் தற்போது அதிகளவில் ரம்பூட்டான், பிளம்ஸ், பேரி, பேஷன் புரூட், ஆப்பிள் உள்பட பல்வேறு வகையான பழங்கள் அதிகளவில் விளைந்துள்ளது. இதில் தற்போது தாட்பூட் என அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட் சீசன் களைகட்டியுள்ளது.
குன்னூர் பழப்பண்ணையில், பேஷன் ஃபுரூட் பழங்களிலிருந்து பழரசம் தயாரிக்கும் பணியில் பெண் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அங்கு தயாரிக்கப்படும் பழரசம் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 700 கிராம் கொண்ட பாட்டிலின் விலை ரூபாய் 122 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.