நீலகிரி மாவட்டத்தில் ஏழாயிரம் ஹெக்டேரில் மலை காய்கறிகளான கேரட் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. மாவட்டத்தில முத்தோரை பாலடா, கேத்தி பாலாடா, காட்டேரி வில்லேஜ், சேலாஸ், தூதூர் மட்டம், கொலக்கம்பை உள்ளிட்ட பல கிராமங்களில் காரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகையும் அதனை சுற்றி உள்ள கிராம பகுதிகளிலும் இரவு நேரங்களில் கன மழை பெய்வதும், பகலில் தூவானமாக இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மலைகாய்கறிகளின் சாகுபடி பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீரால் கேரட் உள்ளிட்ட மலை காய்கறிகள் அழுகத் தொடங்கி உள்ளன.