உதகை மாவட்டம் அருகே உள்ள டி.ஆர். பஜார் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்துவருகின்றன. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு செய்துவரும் இந்த மக்களின் வேளாண் நிலத்திற்குச் செல்லும் பாதையில் தனியார் எஸ்டேட் நிர்வாகம் குழி வெட்டி பாதையை மறித்ததுடன், அந்த இடம் எஸ்டேட்டுக்குச் சொந்தமானது என்று கூறுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பு- போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் - நீலகிரி செய்திகள்
நீலகிரி: உதகையில் பொதுமக்கள் பயன்படுத்திவந்த நடைபாதையை தனியார் எஸ்டேட் நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ததைக் கண்டித்து உழவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
இந்நிலையில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த இடத்தை வனத் துறையினரின் ஒத்துழைப்புடன், தனியார் எஸ்டேட் நிர்வாகத்தினர் சொந்தம் கொண்டாடிவருவதைக் கண்டித்து உழவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பதற்றம் நிலவியது.