நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கரோனா தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். அவர்கள் வசித்த பகுதியான ராஜாஜி நகர், பள்ளிவாசல்தெரு, உழவர் சந்தை ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டன.
இதையடுத்து, கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அப்பகுதி மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் ஆலோசனைப்படி பொதுமக்களுக்கு காய்கறிகள் மலிவான விலையில் கிடைக்க உழவர் சந்தை 50 நாள்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
மீண்டும் திறந்த உழவர் சந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தையில் பொதுமக்களுக்கு அதிகளவில் கரோனா தொற்று பரவிய பயத்தால், தற்போது குன்னூர் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு பொதுமக்கள் வரத்தயங்குகின்றனர். இதனால், உழவர் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: ஒட்டன்சத்திரம் சந்தையில் எஸ்.பி. ஆய்வு!