தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படுகர் சமூகத்தின் முதல் பெண் ஐஏஎஸ்...! - படுக இனத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்

நீலகிரி: கோத்தகிரியைச் சேர்ந்த தேயிலை விவசாயி மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து, படுகர் சமூகத்தின் முதல் பெண் ஐஏஎஸ் என்ற பெறுமையை பெற்றுள்ளார்.

படுக இனத்தின் முதல் பெண் ஐஏஎஸ்-ஆன தேயிலை விவசாயி மகள்...!
படுக இனத்தின் முதல் பெண் ஐஏஎஸ்-ஆன தேயிலை விவசாயி மகள்...!

By

Published : Aug 8, 2020, 5:56 PM IST

Updated : Aug 8, 2020, 7:32 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குளா கிராமத்தைச் சேர்ந்த சுந்தரன் - சித்ராதேவி தம்பதியினரின் மகள் மல்லிகா, ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 621ஆவது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை தேயிலை விவசாயி, தாய் ஓய்வு பெற்ற செவிலியர்.

மல்லிகா 12ஆம் வகுப்பு முடித்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக சேர்ந்தார். பின்னர் பட்டப்படிப்பை முடித்தவுடன் மல்லிகா கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஒரு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். மூன்று முறை முயற்சி செய்து தோல்வியடைந்த மல்லிகா நான்காவது முறை இந்திய அளவில் 621ஆவது இடம்பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

படுகர் சமூகத்தின் முதல் பெண் ஐஏஎஸ்-ஆன தேயிலை விவசாயி மகள்...!

இதன் மூலம் இவர் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் சமூகத்தின் முதல் பெண் ஐஏஎஸ் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனையடுத்து இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க...இருமுறை கைவிடப்பட்ட தரையிறங்கும் முயற்சி... 3ஆவது முறை நிகழ்ந்த பெரும் விபத்து!

Last Updated : Aug 8, 2020, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details