நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடபட்டு வருகின்றன. சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறி சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்தக் கூடாது எனவும், அதனை மீறுபவர்கள் மீது ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கபடும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு மலை காய்கறிகளை பயிரிடும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் மலை காய்கறி பயிரிடும் விசாயிகளின் ஆலோசனை கூட்டம் உதகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பூச்சிக்கொல்லி பயன்படுத்தினால் அபராதம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...விவசாயிகள் எதிர்ப்பு இதில் போதிய கால அவகாசம் அளிக்காமல் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தக்கூடாது என்றும், பூச்சிக்கொல்லி மருந்துகளின்றி காய்கறிகளை சாகுபடி செய்தால், உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மேலும், விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையும் சேர்ந்து ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளின்றி மலை காய்கறிகளை சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெற தேவையான சோதனைகளைச் செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னர் மலை மாவட்ட விவசாயிகளை இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதையும் படிங்க:சுவரில் ஈட்டிகளை பொருத்தியவர்கள் மீது நவடிக்கை எடுக்க கோரிக்கை!