நீலகிரி:நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள ஒடக்கொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(52).
இன்று (டிச.8) இவர் தனது காஃபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று மணியைத் தாக்கி, காலால் மிதித்தது. இதனால் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார்.