நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கெந்தோரை புதுவீடு பகுதியை சேர்ந்த விவசாயி சீனிவாசன் (38). இந்நிலையில், இவர் நேற்று முன்தினம்(ஆக.15) தேனாடுகம்பை பகுதியில் மது அருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் என்பவர், சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.12 ஆயிரம் அபராதமாக கேட்டது மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் சீனிவாசனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சீனிவாசன், நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முன்னதாக சீனிவாசன் அவரது உறவினர் சக்திவேல் என்பவரிடம், காவல்துறையினர் தன்னை ரூ.12ஆயிரம் அபராதம் செலுத்தும் படி கட்டாயப்படுத்துகின்றனர். எனது இரு சக்கர வாகனத்தையும் தர மறுக்கின்றனர். காவல்நிலையத்தில் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் நான் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
காவல்துறையினர் திட்டியதால் விவசாயி தற்கொலை இதையடுத்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கு, தேனாடுகம்பை காவல்துறையினரிடமும், சீனிவாசன் குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க:'ஃபர்ஸ்ட் டான்ஸ் ஆடு... எப்ஐஆர் போடலாம்' ஆய்வாளரின் கண்டிஷனால் அதிர்ந்த சிறுமி!