நீலகிரி: தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதில் அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. அதனை மீறியும் கடன் பெற்று சில விவசாயிகள் கேரட் பயிரிட்டு வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் கேரட் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த சில நாள்களாக கேரட் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனைக்கி வந்த நிலையில், தற்போது கிலோ 25 முதல் 45 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.