தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியரைத் தொடர்ந்து தேயிலை வாரிய இயக்குநர் - சைபர் கொள்ளையர்கள் அட்டசாசம்! - குன்னூர் தேயிலை வாரிய இயக்குநர் பெயரில் போலி இமெயில்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரில் போலி இ-மெயில் கணக்கு தொடங்கப்பட்டது போல் தேயிலை வாரிய இயக்குநர் பெயரிலும் போலி இ-மெயில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

fake-email-id-in-name-of-executive-director-tea-board-coonoor
fake-email-id-in-name-of-executive-director-tea-board-coonoor

By

Published : Oct 14, 2020, 8:16 PM IST

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெயரில் போலி இ-மெயில் கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலம் மோசடி செய்ய முயற்சி நடந்தது. இதுகுறித்து ஆட்சியர் "எஸ்பி.யிடம் புகார் அளித்துள்ளேன். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி பெயரில் போலி இ-மெயில் கணக்கு தொடங்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் மாவட்ட எஸ்பி.க்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேயிலை வாரிய துணை இயக்குநர் ஹரி பிரகாஷ், chiefexecutive191@gmail.com எனும் இ-மெயிலில் இருந்து வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்பவேண்டாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆட்சியர் கேட்கிறார்: அமேசான் பரிசுக் கூப்பன் - உலாவும் சைபர் கொள்ளையர்கள்!

ABOUT THE AUTHOR

...view details