தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பருவமழையை எதிர்கொள்வது குறித்து பேரிடர் மீட்பு குழுவிற்கு செயல்முறை விளக்கம்!

நீலகிரி: குன்னூரில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் மீட்புக் குழுவிற்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

nilgiri

By

Published : Oct 20, 2019, 9:55 AM IST

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், குந்தா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழைப் பெய்து வருகிறது.

இதன் விளைவாகப் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

எனவே, இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் மீட்புக் குழுவினருக்கும், உள்ளூர் தீயணைப்புத்துறையினருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பேரிடர் மீட்பு குழுவிற்கு செயல்முறை விளக்கம்

இதில் நிலச்சரிவு, இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளித்தல் உள்ளிட்டவைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குன்னூர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர் கனமழை

ABOUT THE AUTHOR

...view details