தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டமாக நாளை மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் 294 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 91 வாக்குச்சாவடிகள் தாளவாடி, தலமலை, குன்றி, கடம்பூர் மலைப்பகுதியில் உள்ளன. அதனைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.
டிராக்டரில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்ற அதிகாரிகள் - malliyamthurkkam
நீலகிரி: சத்தியமங்கலம் அடுத்த மல்லியம்துர்க்கம் கிராமத்துக்கு டிராக்டர் மூலம் வாக்குப்பெட்டிகளை தேர்தல் அலுவலர்கள் கொண்டு சென்றனர்.
சத்தியமங்கலம் கடம்பூர் மல்லியம்துர்க்கம் மலைக்கிராமத்தில் உள்ள 495 வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிக்கு டிராக்டர் மூலம் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், போதிய சாலை வசதியில்லாததால் கடந்த 50 ஆண்டுகளாக நடைபாதையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. தேர்தல் அலுவலர்கள் செல்லும் வனச்சாலையில் யானை, கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளூர் கிராமவாசிகளின் துணையுடன் பாதுகாப்பாக சென்றனர்.
முன்னதாக இக்கிராம மக்கள் சாலை வசதியில்லாததால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.