தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா - பொங்கல் வைத்து கொண்டாடிய அரசு அலுவலர்கள்

நீலகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்தவ பொங்கல் நிகழ்ச்சியில் பாரம்பரிய உடை அணிந்து அரசு அலுவலர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

District Collector's Office
District Collector's Office

By

Published : Jan 11, 2020, 3:02 PM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இது தமிழர்களின் முக்கிய பண்டிகை என்பதால் அதற்கான கொண்டாட்டங்கள் தற்போது முதலே களைகட்ட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவழகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா

இதனையடுத்து அனைத்து தரப்பு ஊழியர்களும் பங்கேற்று தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினார்கள்.

இதையும் படிங்க: கோலாகலமாக நடைப்பெற்ற சமத்துவ பொங்கல்

ABOUT THE AUTHOR

...view details