தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூரில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்

நீலகிரி: குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

Buildings

By

Published : Jul 3, 2019, 1:15 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில், டிரிபிள் ஏ கமிட்டி, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் அனுமதி பெற்ற பின்னரே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் பலரும் இரண்டில் யாரேனும் ஒருவரிடம் மட்டும் அனுமதி பெற்று விதியை மீறி பிரம்மாண்ட கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு, கட்டடங்கள் கட்டுவதற்கு வழிவகை செய்வதாக குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு விதிமீறி கட்டப்பட்ட ஆயிரத்து 832 கட்டடங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அதேபோன்று விதிமீறி கட்டப்பட்ட 620 கட்டடங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் புதிய விதிமீறி கட்டடப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

மேலும், பல பகுதிகளில் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள், நகராட்சி குடியிருப்புகள், ஓடை, நீரோடைகள் கால்வாய் பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து விதிமீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆக்கிரமிப்புகளுக்கு முறைகேடாக பட்டா வழங்குவதை தடுத்து, நீர்நிலை கட்டடங்களையும் இடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூரில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்

ABOUT THE AUTHOR

...view details