தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்! பயணிகள் அச்சம் - elephant

நீலகிரி: சாலையை வழிமறித்து, ஆக்ரோஷமாக ஓடிய காட்டுயானைகள் கூட்டத்தால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்படைந்தது.

காட்டுயானை

By

Published : Mar 25, 2019, 8:57 AM IST

நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் முதல் கோவை வரை செல்லும் சாலை, கெத்தை வனப்பகுதியை கடந்து செல்லகிறது.வனப்பகுதிகள் வழியாகசெல்லும் இந்த மலைப்பதையில் யானை, புலி, சிறுத்தை, கரடி ஆகியவன விலங்குகள் அவ்வப்போது சாலைகளை கடக்க முயலும்.

வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால், தண்ணீர் தேடி அலையும் காட்டுயானைகள் கூட்டம் ஒன்று இந்த கெத்தை பகுதியில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில், மஞ்சூர்-கேவை சாலையில் சுமார் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றைஇந்த காட்டுயானைகள் கூட்டம் வழிமறித்துள்ளது.

அதிலிருந்த யானை ஒன்று அதிவேகமாக ஓடி வந்ததைக் கண்டு பயணிகள்அச்சமடைந்தனர், இருப்பினும் எந்தவித தாக்குதலிலும் ஈடுபடாமல் யானைகள் சென்றதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

சுமார் 20 நிமிடங்கள்சாலையில் நின்றுகொண்டிருந்தகாட்டுயானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details