நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 680 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இங்குள்ள தெப்பக்காடு, பாம்பேக்ஸ் யானைகள் முகாமில் கும்கி யானைகள் உள்பட 26 யானைகள் பராமரிக்கப்பட்டுவருகிறது. நாள்தோறும் இந்த யானைகளுக்கு காலை, மாலை நேரங்களில் ஊட்டச்சத்து உணவுகள், மருந்துகள் வழங்கப்பட்டுவருகின்றன.
வருடத்தில் இரண்டு முறை யானைகள் உடல்தகுதியுடன் இருப்பதைக் கண்டறிய ஒவ்வொரு யானையையும் எடைபோட்டு எடை அதிகமானால் உணவுகள், மருந்துகளில் கட்டுப்பாடுகளும், எடை குறைந்த பட்சத்தில் அதற்கான ஊட்டச்சத்துகளும் மருந்துகளும் அதிகமாக தருவது வழக்கம்.
தொரப்பள்ளியில் நடந்த யானைகளை எடைபோடும் நிகழ்வு இந்நிலையில், நேற்று அதற்கான எடை போடும் நிகழ்வு தொரப்பள்ளி எடைமேடையில் நடைபெற்றது. இரண்டு முகாம்களிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக சுமார் 26 யானைகள் ஓய்யாரமாக நடந்துவர யானைகளுக்கு எடை போடப்பட்டது.
எடை போடும் நிகழ்வு முடிவடைந்த நிலையில், கடந்த வருடத்தைவிட யானைகள் அனைத்தும் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். வரும் 6ஆம் தேதி வனத் துறைக்கு சொந்தமான 26 யானைகளுக்கு 48 நாள்கள் புத்துணர்வு முகாம் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க : மதுபோதையில் நடனமாடிய பாஜக கவுன்சிலர்?