தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானைகள் அட்டகாசம்: பீதியில் தோட்டத் தொழிலாளர்கள்!

நீலகிரி: தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் தோட்டத் தொழிலாளர்கள் பீதியடைந்து பணிக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்
தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்

By

Published : Jul 7, 2020, 5:08 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கதையாக உள்ளது. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக ஒன்று அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட யானைகள் மட்டுமே கிராமப்பகுதிகளில் சுற்றி வந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. ஆனால் கடந்த மூன்று நாள்களாக அத்திக்குன்னா பகுதியில் 12-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களிலும், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளிலும் சுற்றி வந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை அத்திக்குன்னா தனியார் தேயிலை தோட்டத்தில் அந்த யானைகளின் கூட்டமானது சுமார் மூன்று மணி நேரமாக தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டு வந்தது. இதனை அறிந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இத்தகவலை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் வனத்துறையினர் போராடி விரட்டியும் யானையானது வனப்பகுதிக்கு செல்லாமல் இருந்தது. பின் சில மணி நேரத்துக்குப் பிறகு வனப்பகுதி ஒட்டியுள்ள புதருக்குள் சென்று மறைந்தது.

மேலும் அந்த யானை கூட்டமானது எப்போது வேண்டுமானாலும் தேயிலைத் தோட்டங்களுக்குள் வரும் என்ற அச்சத்தால் பொது மக்கள் பீதியில் தோட்டங்களுக்குள் வராமலும், கிராமத்தைவிட்டு வராமலும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.

இதையும் படிங்க:சிக்கியது 10ஆவது கரடி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

ABOUT THE AUTHOR

...view details