நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை பல்வேறு இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்ததால் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீயா... நானா... பார்க்கலாம்! வெள்ளத்துடன் யானையின் யுத்தம்
நீலகிரி: கனமழை காரணமாக முதுமலை தெப்பக்காடு ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய யானை ஒன்று அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு மறுகரையை அடைந்தது.
elephant
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் யானை ஒன்று மழைநீர் வெள்ளத்துடன் அரை மணிநேரம் போராடி மறுகரைக்குச் சென்றது.யானை மறுகரைக்குச் செல்ல போராடியது பார்ப்போரை நெகிழவைத்தது.