தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சுற்றித்திரியும் யானைக் கூட்டம்: வாகன ஓட்டிகள் பீதி! - நீலகிரியில் சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

elephant roaming on road side
சாலையில் திரியும் காட்டு யானை

By

Published : Dec 8, 2019, 7:41 PM IST

நீலகிரி மாவட்டம் 65 விழுக்காடு வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கும் சாலையோரங்களுக்கும் வருகின்றன.

தற்போது குன்னூர் பகுதிகளில் பெய்த கனமழையால் அனைத்து இடங்களும் செழித்துக் காணப்படுகிறது. இவற்றை உண்பதற்கு தற்போது யானைக் கூட்டம் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

சாலையில் திரியும் காட்டு யானை

இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் அதிகளவில் புட்கள் நிறைந்து காணப்படுவதால், யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளன. இதனால், அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். யானைகளைப் புகைப்படங்கள் எடுக்கவோ, அவற்றை கூச்சலிட்டு துன்புறுத்தவோ கூடாது என வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராயக்கோட்டையில் யானைகள் அட்டகாசம் - பயிர்கள் சேதம்!

ABOUT THE AUTHOR

...view details