தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் முகாம் - வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஏழு யானைகள் முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Elephant problem at coonoor
Elephant problem at Coonoor to Mettupalayam road

By

Published : Feb 12, 2020, 5:37 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமையாக மாறி வருகின்றன.

உறைபனியால் வறட்சியாக இருந்த வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகின்றன. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் வனப்பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உணவைத் தேடி சமவெளிப் பகுதிகளிலிருந்து குட்டியுடன் ஏழு யானைகள் வந்து மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டு உள்ளன. யானைகளை சாலைக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் முகாம்

அருகில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வானிலை குறித்து தகவல் பரிமாற்ற மிதவை உபகரணம் கண்டெடுப்பு

ABOUT THE AUTHOR

...view details