அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ள நீலகிரியில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. அவ்வவ்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் விலங்குகள் வருவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று திடீரென ஹில்கிரோ பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் கடந்து சென்றுள்ளதை அங்குள்ள சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.
குன்னூர் ஹில்கிரோவில் முகாமிட்ட யானைக் கூட்டம் - வைரல் காணொலி! - nilgiri news
நீலகிரி: ஹில்கிரோ பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் கடந்து செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நீலகிரி
இதுதொடர்பாக தகவலறிந்த வனத்துறையினர் யானைகள் கூட்டத்தைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மலைப்பாதையில் சுற்றித்திரியும் யானைகள் கூட்டம் ஹில்கிரோ பகுதியில் முகாமிட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'அடேய் ஓடுடா ஓடு' - விளைநிலத்தில் புகுந்து காட்டெருமை அட்டகாசம்!