நீலகிரி மாவட்டம், மஞ்சூர் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள ஓணிக்கண்டி கிராமத்திற்குள் ஐந்து காட்டுயானைகள் இன்று புகுந்து வீடுகளின் பின்புறம் இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள்: மக்கள் அச்சம் - enter village
நீலகிாி: மஞ்சூா் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
elephant enter village nilagiri
இதைப் பார்த்து அச்சமடைந்த கிராமக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் அந்த யானைகள் ஒணிக்கண்டி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது. இதனால் அச்சம் கொண்ட கிராம மக்கள் மீண்டும் யானைகள் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதால், நிரந்தரமாக விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.