நீலகிரி:கூடலூர் வனப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண் யானை ஒன்று வாலில் காயத்துடன் அவதிபட்டு வந்தது. இதனையறிந்த வனத் துறையினர், கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று , கும்கி யானைகள் உதவியுடன் காயம்பட்ட யானையை பிடித்தனர்.
பின்னர், யானைகள் முகாமில் அமைக்கப்பட்ட கராலில் அடைத்து சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று யானைக்கு காய்ச்சல் வந்து, காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.