நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகேயுள்ள துாதுாா்மட்டம் கிராமத்தில், 21 நாட்களாக நான்கு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அவ்வப்போது விளை நிலங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கிரேக்மோா் பகுதியிலுள்ள மளிகை கடைக்குகள் புகுந்து நான்கு காட்டு யானைகள், சுமாா் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களை நாசம் செய்துள்ளது.
மளிகைக் கடையை நாசம் செய்த காட்டு யானைகள் மேலும், அங்குள்ள ரேஷன் கடைக்குள் புகுந்து யானைகள் 300 கிலோ மதிப்பிலான அாிசி, சா்க்கரை, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்களை யானைகள் நாசம் செய்துள்ளது.
யானைகளின் அட்டகாசத்தைத் தாங்கமுடியாத அப்பகுதி மக்கள், நான்கு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோாிக்கை விடுத்துள்ளனா்.
இதையும் படிங்க: 'வாழைத்தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்' - கண்ணீர் விடும் விவசாயிகள்