நீலகிரி:குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் பலா பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூர் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. அந்த வகையில் மலைபாதையை சுற்றி 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது ரயில் நிலையங்களுக்கு அருகில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றன.
ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் யானை... மலை ரயில் பயணிகள் உற்சாகம்... - ஹில்குரோவ் ரயில் பாதையை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற யானை
குன்னூரில் ஹில்குரோவ் ரயில் நிலையம் வழியாக வனப்பகுதிக்குள் சென்ற யானையை கண்ட பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
குன்னூரில் ஹில்குரோவ் ரயில் பாதையை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற யானை
அப்படி இன்று (ஜூன் 4) கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை ஹில்குரோவ் ஸ்டேஷன் தண்டவாளம் வழியாக அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர். மலை ரயிலில் பயணிக்கும் மகிழ்சியோடு, யானையையும் கண்டது சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
இதையும் படிங்க:Watch: சத்தியமங்கலம், குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டம்