நீலகிரி மாட்டத்தில் முதுமலை புலிகள் காப்பக சரணாலயம் உள்ளது. இங்கு புலி, யானை, சிறுத்தை, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் வாழை தோட்டம் ஆணை கட்டி சாலையில் வன விலங்குகளை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஜீப்பில் சென்றனர். அப்போது அங்கு மூன்று யானைகள் சாலை ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. இதனை சுற்றுலாப் பயணிகள் ரசித்துக் கொண்டிருந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை விரட்டும் யானை...! - elephant
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனத்தை யானை விரட்டும் காட்சி வெளியாகியுள்ளது.
யானை
அப்போது, திடீரென ஒரு யானை ஜீப்பை தாக்க வந்தது. சிறிது தூரம் வாகனத்தை ஆக்ரோசமாக துரத்தி பின் சாலை ஓரமாக சென்றது. இந்த காட்சிகளை வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளனர்.