தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காயத்துடன் சுற்றித் திரிந்த யானைக்குட்டி உயிரிழப்பு - முதுமலை வனப்பகுதி

நீலகிரி: முதுமலை வனப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்த 3 மாதமே ஆன குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

elephant calf dies of injury in nilgiris
elephant calf dies of injury in nilgiris

By

Published : Feb 15, 2021, 5:15 PM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை மிதிர்ல்லால் பாலம் அருகில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று தனியாக சுற்றித் திரிவதாக வனத்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், யானைக் குட்டியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து வனத்துறை மருத்துவர் ராஜேஷ் குமாருக்கு தகவல் அளித்தனர்.

காயத்துடன் சுற்றித் திரிந்த யானைக்குட்டி உயிரிழப்பு

குட்டி யானையை பரிசோதனை செய்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர், அதற்கு சிகிச்சை மற்றும் முறையான உணவு அளிக்கப்பட்டு, குட்டி யானையின் தாயைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் மூன்று மாதமாக காயத்துடன் சுற்றித்திரிந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தது.

ABOUT THE AUTHOR

...view details